RSS

வினோத்..


முத்தமிழ் குழுமத்தில் எப்படி மஞ்சூர் அண்ணாவோ அப்படி குழுமத்தை கட்டிகாப்பதிலிருந்து எனக்கு ஊக்கம் கொடுத்தது வரை..வினோத்

ஆன்மீக,பக்தி பழக்கமான இவருக்கும் எனக்கும் ரொம்ப தூரமாய் இருந்தாலும் தோள்தட்டிதரும் தோழனாய் மிக அருகில்..

இவரை நேரில் பார்த்ததில்லையென்றாலும் போனில் பேசியிருக்கிறேன்..அதிர்ந்து கூட பேசத்தெரியாத இவர் வருங்காலங்களில் என்ன செய்யபோகிறார் என்ற கவலையும் உண்டு..;-))))))

தனிமனிதனா 5000 பேரை கட்டுக்குள்ள வச்சுட்டிருக்க கெட்டிக்காரன் என்பதால் ரொம்ப பிடிக்கும்..

சண்டைகளை மிக சாதரணமாக ரணமாக்காமல் இவர் கையாளும் முறையும் எனக்கு பிடிக்கும்...

பச்சப்புள்ள @ ஸ்ரீ மூர்த்தி...

என்னோட அதிகமா நெருங்கி பழகிய நண்பன் பச்சப்புள்ள @ ஸ்ரீ மூர்த்தி...

இவனை எனக்கு பிடிச்சது இவனோட டைமிங் கமெண்ட்டு தான்..பலநாள் இவனோட மடலை படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சி எல்லாரும் என்னை ஒருமாதிரி பாக்குற அளவுக்கு ஆகியிருக்கேன்.]

சாட்ல பேசி சிலநாளில் போன் நம்பர் வாங்கி பேச ஆரம்பிச்சேன்..இவனை பச்சபுள்ளன்னு கூப்பிடாம திருமூர்த்தின்னு தான் கூப்பிடணும்னு முதல் தடவை சொன்னேன்..ஆனா இதுவரைக்கும் பச்ச, மச்சி ரெண்டுதான்..

நானும் இவனும் பலநாள் அனந்தாக்களா தான் பேசிக்குவோம்..ஹி ஹிஹி..இப்பலாம் இல்ல..ஓம்ஸ்ரீ க்கு முன்னாடி மணிக்கணக்கா பேசிட்டிருந்த நண்பன்..என்ன பேசுவோம்னு தெரியாது ஆனா நிறைய பேசுவோம்..
இப்பதான் மச்சி பேங்களூரும் ஹோசூரும் சேலமும்னு மாறி மாறி பிசியாகிட்டான்..இருந்தாலும் வாரத்தில் ரெண்டுமூனு முறையாவது போன்ல பேசிக்கறதுண்டு..

இவனோட மடல்களில் நிறைய கருத்து இருக்கும். எப்பவுமே டேய் மச்சி நீ சொல்றது எல்லாமே ஒருமுகமா தொகுத்து கட்டுரை எழுதினா கண்டிப்பா ரீச் ஆகும்னு சொல்லுவேன்.. சரிமச்சி பண்ணிட்டா போச்சுன்னு சொல்லுவான்..செய்தது மட்டுமில்ல..

இவங்கிட்ட என்னை ஆச்சர்யப்படுத்திய விசயம் இன்னொன்னு என்னா ஒருத்தரோட மடல்களை வச்சு அவங்களை அப்படியே உள்வாங்கி அதை தக்க தருணத்தில் அதே ஸ்டைல்ல திருப்பிக்கொடுக்கறது..

ஞாபகசக்தி அதிகமாவே கொடுத்திருக்கான் ஆண்டவன்..இரண்டுமுறை நேர்ல பாத்திருக்கேன்..என்னோட அழைப்பை ஏற்று என் தங்கை கல்யாணத்துக்கு வந்தவனை சாப்பிடக்கூட வைக்கமுடியா சூழ்நிலையில் மாட்டிக்கொண்டது தான் எனக்கு இன்னும் வருத்தமாகவே இருக்கும்...

இந்தமடல் மூலமா ஒன்னே ஒன்னு கேட்டுக்கறேன் பச்சக்கிட்ட...எங்கவீட்டுக்கு வந்து ஒருதபா சாப்பிட்டுட்டு போயிடு மச்சி..

தேனுஷா

என்னுடைய மனசுமுழுக்க நிறைஞ்ச இனிய தோழி தேனுஷா..


இங்கு நம் குழுமத்தில் சிலகாலம் நண்பர்கள் சண்டையிட்டுக்கொண்டு மடலிடாத நேரம் நானும் முத்தமிழில் போய் இங்கு கொட்டிகிட்டிருந்த குப்பையை கொட்ட ஆரம்பித்தேன்..

அப்போதான் அர்ஜீன் வந்து டேய் சாந்தி ,தேனுஷான்னு ரெண்டு பேரு சங்கம் ஆரம்பிச்சு சாவடிக்கிறாய்ங்க..நீயும்வாடா நாம அவங்களுக்கு எதிரா ஒரு சங்கம் ஆரம்பிப்போம்னு ஆரம்பிச்சது தான் புதியமன்னர்கள் சங்கமம்..

யார் ரெண்டுபேரை சண்டை போட்டுதுரத்தணும்னு வந்தேனோ அவங்க ரெண்டுபேரும் தான் அதிகமா மனசுக்குள்ள ஒட்டிக்கிட்டாங்க..என்னை இங்க அழைத்த அர்ஜீனை விட..

உனக்காக என்ற ஒரு இழை ராஜி ஆரம்பிச்சு வச்சது..அதில தேனுஷா கவிதை எழுத அதுக்கு பதில் மொக்கையா அனுப்பிட்டிருந்த நான் சில மணிநேரங்களில் இருவரும் மாறி மாறி காவியமா எழுத ஆரம்பிச்சோம்,..ஒரு ரெண்டுநாள் போனதின் பின்னாடி சாட் பண்ண ஆரம்பிச்சோம்..

அந்த காவியத்தை நாங்க கொண்டுப்போறதுக்குள்ள ரெண்டுபேரும் ரொம்ப நெருங்கிபழக ஆரம்பிச்சோம் கடல் கடந்து...இவளும் ஓம் மாதிரி தான்..எனக்கு அட்வைஸ் பண்றதிலிருந்து எங்க வீட்ல இருக்கறவங்க நலம் விசாரிக்கற வரைக்கும்

எலும்பா ,லூசு ,மண்டு முண்டம், இதெல்லாம் இவ எனக்கு வச்ச பட்டபெயர்கள்.எதாச்சும் ஒருதலைப்புல வெச்ச கை எடுக்காம வேகமா எழுதக்கூடிய திறன் எனக்கு வந்தது தேனுவும் நானும் எழுதின உனக்காக கவிதை இழையிலிருந்து தான்..

காலைல ஆரம்பிச்சா ராத்திரி பன்னிரண்டு மணிவரைக்கும் கூட சாட்பண்ணிட்டிருப்போம் ரெண்டுபேரும்..விடுமுறைநாளில் எங்காவது ஒரு பிரவுசிங் சென்டர் போய் சாட் பண்ணினாதான் பொழுது போனமாதிரி இருக்கும்னா பாருங்களேன்..

பொதுவா தேனுவோட பெண்ணியம் பேசும் முறை எனக்கு ரொம்பவே பிடிக்கும்..என்ன பாரதி கண்டபுதுமைப்பெண்ணோ ஆரம்பத்தில் நினைச்சிருக்கேன்..ஆனா போக போக புதுமைப்பெண்ணிலிருந்து ஒரு அட்வான்ஸ் ஸ்டேஜ்ல தேனு இருக்கறதா மனசுக்குள்ள ஒட்டிக்கிட்ட நினைவை நான் வளர்ந்த சூழலோ என் மனநிலையாலோ தட்டிவிடமுடியலை..

ரொம்ப லேட்டா கோபப்படுறதும் ரொம்பசீக்கிரமே பேசிடறதும் இவக்கிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட பாடங்கள்னும் சொல்லலாம்..
என்னோட‌ தோழி பேக‌மை என் நினைவில் எப்போதும் டார்ட்டாயிஸாக‌ சுழ‌ல‌வைக்கும் நிக‌ழ்கால‌ம் தேனு....

இந்த‌ இழைமூல‌மா என்னோட‌ பிரிய‌மான‌ தோழிக்கு க‌விதை தொகுப்பு பிடி எப் பைலாக‌வாவ‌து அனுப்பிடுவேன்னு சொல்லிக்க‌றேன்..

ஓம் ஸ்ரீ என்கிற வில்லன்


பொதுவா இணையதளங்களில் எதிர்பாலினநட்பும் காதலும் தான் கரைபுரண்டு கொலை ஏமாற்றம் என்று ஏகப்பட்ட செய்திகளை படித்தே பழக்கப்பட்ட எனக்கு இணையத்தில் உலாவும் சந்தர்ப்பம் கிடைச்சப்ப நான் படித்த செய்திகளின் தாக்கத்திலிருந்து மீளாமல் தான் உலவினேன்...

சிலநாட்கள் வரை வெட்டியா பிட்டுப்படங்களை பார்த்துக்கொண்டு சுத்திட்டு இருந்த எனக்கு முதன் முதலா அறிமுகமானது கூகிளின் தமிழ்குழுமமான தமிழ் நண்பர்கள் தான்..

என் கவிதைப்பசிக்கு தீனிப்போட்டது இந்த குழுமம் தான்..விவாதங்கள் சமூக அக்கறைக்கொண்டவர்கள்னு ஏகப்பட்ட பேரை பார்க்கமுடிஞ்சது ஒரு சந்தோசம்..அதுவுமில்லாம கணினியில் தமிழில் உரையாடுவதை பார்த்த எனக்கோ ஆச்சர்யமாகவும் வசதியாகவும் போய் விட்டது...ஏன்னா நான் அதிகம் படிக்காததால ஆங்கில அறிவு இல்லாம இருந்தது...இங்கு தான் ஆரம்பமானது என்னுடைய மிகப்பெரிய உலகமும் நட்பு வட்டமும்...

இங்கிருந்து முத்தமிழ் ,அன்புடன், பண்புடன், பிரவாகம் ,தமிழமுதம்னு பல உலகத்தில் நுழைய ஆரம்பிச்சேன்.

பொதுவா நாட்குறிப்பு எழுதாத நான் இணையத்தில் எழுதணும்னு ஆசைவந்ததும் இணைய நண்பர்களும் நானும் எப்படியெல்லாம் பழகினோம் என்பதை தான் எழுதணும்னு ஆசை...

அதனால் உருவானது தான் இந்த வலைப்பக்கம்..

முதலில் எனக்கு ரொம்ப பிடிச்ச என் மச்சான் ஓம் ஸ்ரீ என்கிற வில்லன் தான்


ஏன்னா இவனோட நான் பேசிட்டிருக்கறத பார்த்துட்டு எங்க ஊர்ல வீட்ல பையன் லவ் பண்றான்போலன்னு சொல்லுவாய்ங்க..ஒருவேளை நான் பொண்ணா இருந்தா இவனை லவ் பண்ணியிருப்பேனோ என்னவோ...இந்த குழுமத்தில் சேர்ந்த புதிதில் எனக்கு பிடித்தமான காதல் கவிதைகளை எங்கிருந்து தான் சுடுவானோ தெரியலை..அவ்ளோ அழகா இருக்கும் ஒவ்வொன்னும்..

சொல்லப்போனா இந்த கவிதைகளை பாத்து தான் நானும் எப்படியாச்சும் கவிதை எழுதணும் என்கிற ஆசை மனசுக்குள்ள வந்துச்சு..ஏற்கனவே கிறுக்கல்களில் புள்ளையார் சுழிபோட்டிருந்த எனக்கு இவனோட மடலிலிருந்து அ ஆ எழுத ஆரம்பிச்சேன் கவிதைகளில்...

சிலகாலம் காணாம போனவன் திரும்ப வந்து எனக்குள்ள எப்படி வந்தான்னு தெரியலை..ஆனா நல்லாவே மனசுக்குள்ள ஒட்டிக்கிட்டான்..நல்ல நண்பனா என்னோட கஸ்டங்களை கேக்க கூடிய ஆளா அவனோட மனசுல இருக்கறத சொல்லி ஆறுதல் தேடுறவனா தான் படித்த புத்தகங்களை பற்றி என்னிடம் சொல்லி என் மூளையை வளர்க்கும் ஆசானா ....

இவனெல்லாம் ஆரம்பத்திலே கிடைச்சிருந்தா நான் கூட நல்லவனா இருந்திருப்பேனோன்னு தோணும்..எல்லைமீறி போய்க்கொண்டிருந்த என்னை அடித்து அதிக அக்கறைகொண்டவனா எனக்கு புத்திமதி சொல்லி இப்படித்தான் இருக்கணும்னு புரியவச்சவன்..

வாழ்நாளில் கண்டிப்பா என்னால மறக்கமுடியாத ஒரு ஆளா இருப்பான்..எல்லாருக்கும் இவங்க நம்மளோட வாழ்நாளில் கடைசிவரை வரணும்னு ஒருசிலர நினைச்சிட்டிருப்போம்..அந்தமாதிரி ஒரு ஆள் தான் ஓம்...

இன்னும் நிறைய‌ இருக்கு இவ‌னைப்ப‌த்தி சொல்ல‌ ...சொல்லிட்டே போனா உங்க‌ளுக்கும் இவ‌னை ரொம்ப‌ பிடிக்கும்..

முன்னோட்டம்

தனிப்பதிவு