ஓம் ஸ்ரீ என்கிற வில்லன்


பொதுவா இணையதளங்களில் எதிர்பாலினநட்பும் காதலும் தான் கரைபுரண்டு கொலை ஏமாற்றம் என்று ஏகப்பட்ட செய்திகளை படித்தே பழக்கப்பட்ட எனக்கு இணையத்தில் உலாவும் சந்தர்ப்பம் கிடைச்சப்ப நான் படித்த செய்திகளின் தாக்கத்திலிருந்து மீளாமல் தான் உலவினேன்...

சிலநாட்கள் வரை வெட்டியா பிட்டுப்படங்களை பார்த்துக்கொண்டு சுத்திட்டு இருந்த எனக்கு முதன் முதலா அறிமுகமானது கூகிளின் தமிழ்குழுமமான தமிழ் நண்பர்கள் தான்..

என் கவிதைப்பசிக்கு தீனிப்போட்டது இந்த குழுமம் தான்..விவாதங்கள் சமூக அக்கறைக்கொண்டவர்கள்னு ஏகப்பட்ட பேரை பார்க்கமுடிஞ்சது ஒரு சந்தோசம்..அதுவுமில்லாம கணினியில் தமிழில் உரையாடுவதை பார்த்த எனக்கோ ஆச்சர்யமாகவும் வசதியாகவும் போய் விட்டது...ஏன்னா நான் அதிகம் படிக்காததால ஆங்கில அறிவு இல்லாம இருந்தது...இங்கு தான் ஆரம்பமானது என்னுடைய மிகப்பெரிய உலகமும் நட்பு வட்டமும்...

இங்கிருந்து முத்தமிழ் ,அன்புடன், பண்புடன், பிரவாகம் ,தமிழமுதம்னு பல உலகத்தில் நுழைய ஆரம்பிச்சேன்.

பொதுவா நாட்குறிப்பு எழுதாத நான் இணையத்தில் எழுதணும்னு ஆசைவந்ததும் இணைய நண்பர்களும் நானும் எப்படியெல்லாம் பழகினோம் என்பதை தான் எழுதணும்னு ஆசை...

அதனால் உருவானது தான் இந்த வலைப்பக்கம்..

முதலில் எனக்கு ரொம்ப பிடிச்ச என் மச்சான் ஓம் ஸ்ரீ என்கிற வில்லன் தான்


ஏன்னா இவனோட நான் பேசிட்டிருக்கறத பார்த்துட்டு எங்க ஊர்ல வீட்ல பையன் லவ் பண்றான்போலன்னு சொல்லுவாய்ங்க..ஒருவேளை நான் பொண்ணா இருந்தா இவனை லவ் பண்ணியிருப்பேனோ என்னவோ...இந்த குழுமத்தில் சேர்ந்த புதிதில் எனக்கு பிடித்தமான காதல் கவிதைகளை எங்கிருந்து தான் சுடுவானோ தெரியலை..அவ்ளோ அழகா இருக்கும் ஒவ்வொன்னும்..

சொல்லப்போனா இந்த கவிதைகளை பாத்து தான் நானும் எப்படியாச்சும் கவிதை எழுதணும் என்கிற ஆசை மனசுக்குள்ள வந்துச்சு..ஏற்கனவே கிறுக்கல்களில் புள்ளையார் சுழிபோட்டிருந்த எனக்கு இவனோட மடலிலிருந்து அ ஆ எழுத ஆரம்பிச்சேன் கவிதைகளில்...

சிலகாலம் காணாம போனவன் திரும்ப வந்து எனக்குள்ள எப்படி வந்தான்னு தெரியலை..ஆனா நல்லாவே மனசுக்குள்ள ஒட்டிக்கிட்டான்..நல்ல நண்பனா என்னோட கஸ்டங்களை கேக்க கூடிய ஆளா அவனோட மனசுல இருக்கறத சொல்லி ஆறுதல் தேடுறவனா தான் படித்த புத்தகங்களை பற்றி என்னிடம் சொல்லி என் மூளையை வளர்க்கும் ஆசானா ....

இவனெல்லாம் ஆரம்பத்திலே கிடைச்சிருந்தா நான் கூட நல்லவனா இருந்திருப்பேனோன்னு தோணும்..எல்லைமீறி போய்க்கொண்டிருந்த என்னை அடித்து அதிக அக்கறைகொண்டவனா எனக்கு புத்திமதி சொல்லி இப்படித்தான் இருக்கணும்னு புரியவச்சவன்..

வாழ்நாளில் கண்டிப்பா என்னால மறக்கமுடியாத ஒரு ஆளா இருப்பான்..எல்லாருக்கும் இவங்க நம்மளோட வாழ்நாளில் கடைசிவரை வரணும்னு ஒருசிலர நினைச்சிட்டிருப்போம்..அந்தமாதிரி ஒரு ஆள் தான் ஓம்...

இன்னும் நிறைய‌ இருக்கு இவ‌னைப்ப‌த்தி சொல்ல‌ ...சொல்லிட்டே போனா உங்க‌ளுக்கும் இவ‌னை ரொம்ப‌ பிடிக்கும்..

1 comments:

காலப் பறவை said...

வாழ்த்துக்கள்

Post a Comment